search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒப்புகை சீட்டு"

    வி.வி.பாட் எந்திரத்தின் ஒப்புகை சீட்டுக்களை சரிபார்த்தால் தேர்தல் முடிவு அறிவிக்க 6 நாள் ஆகும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமி‌ஷன் விளக்கம் அளித்துள்ளது. #ElectionCommission #SupremeCourt

    புதுடெல்லி:

    கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட ஓட்டு எந்திரத்தில் நாம் ஓட்டுகளை பதிவு செய்தால் எந்த சின்னத்துக்கு ஓட்டு விழுகிறது என்பதை உறுதி செய்யும் எந்த ஆதாரங்களும் இல்லாமல் இருந்தது.

    இப்போது வி.வி.பாட் என்ற புதிய எந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நாம் ஓட்டு பதிவு செய்ததும் எந்த சின்னத்திற்கு ஓட்டு அளித்தோம் என்பதை காட்டும் ஒப்புகை சீட்டு வெளியே வரும்.

    இந்த சீட்டை வாக்காளர்களிடம் கொடுக்க மாட்டார்கள். தேர்தல் அதிகாரிகள் சேகரித்து வைப்பார்கள். ஏதாவது தொகுதியில் ஓட்டு எண்ணிக்கையில் பிரச்சினை ஏற்பட்டால் அதை ஒப்பிட்டு பார்த்து சரிபார்த்து கொள்ளலாம்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வி.வி.பாட் எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. அது சரியாக இருக்கிறதா? என்பதற்காக பாராளுமன்ற தொகுதிக்குள் அடங்கிய ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு ஓட்டு எந்திரத்தில் மட்டும் ஒப்புகை சீட்டுகளை சரி பார்க்க உள்ளனர்.

    இவ்வாறு செய்யாமல் 50 சதவீத வி.வி. பாட் எந்திரங்களில் ஒப்புகை சீட்டுகளை சரிபார்த்து ஓட்டு எண்ணிக்கையை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறி எதிர்க்கட்சிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.


    காங்கிரஸ், தி.மு.க., தெலுங்கு தேசம் உள்ளிட்ட 21 கட்சிகள் இந்த வழக்கை தொடர்ந்தன. இதன் விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் வந்தது.

    அப்போது தேர்தல் கமி‌ஷன் சார்பில் வக்கீல்கள் அரியமா சுந்தரம், அமித் சர்மா ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். அதில் கூறியிருந்ததாவது:-

    வி.வி. பாட் எந்திரம் சரியாக செயல்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய புள்ளியல் துறை சார்பில் 479 வி.வி.பாட் எந்திரங்களை ஆய்வு செய்திருக்கிறார்கள். அதன்படி 99.9936 சதவீதம் வி.பி. பாட் எந்திரம் துல்லியமாக செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து இந்த எந்திரங்களை பயன்படுத்தி வருகிறோம். இதுவரை 1628 சட்டசபை தொகுதிகள், 21 பாராளுமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    அதில் ஒரே ஒரு நபர் மட்டுமே ஓட்டு மாறியதாக புகார் கூறியுள்ளார். மற்றபடி அனைத்து இடங்களிலும் மிகச்சரியாக ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. இந்த கருவி மீது முழு நம்பிக்கை இருக்கிறது. இதில் தவறு நடப்பதற்கு வாய்ப்பு இல்லை.

    நாடு முழுவதும் 10 லட்சத்து 35 ஆயிரம் வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் 50 சதவீதம் வி.வி. பாட் ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என்றால் மிகவும் காலதாமதம் ஆகும்.

    ஒட்டுமொத்த பாராளுமன்ற தொகுதிக்குள் மொத்தம் 4125 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்குள்ளும் சராசரியாக 250 வாக்குச் சாவடிகள் இருக்கின்றன. ஒரு வாக்குச்சாவடியில் 50 சதவீத சீட்டுக்களை எண்ணுவதற்கு ஒரு மணி நேரம் ஆகும்.

    இவ்வாறு 250 வாக்குச் சாவடிகளில் 50 சதவீத ஒப்புகை சீட்டுக்களை எண்ணுவதாக இருந்தால் 5.2 நாட்கள் தேவைப்படும். அதன்பிறகு அந்த சிலிப்களை கண்ட்ரோல் யூனிட்டுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அதற்கு 10 மணியில் இருந்து 12 மணி நேரம் தேவைப்படும். இவ்வாறு தொகுதி முழுவதும் ஒப்புகை சீட்டுக்களை சரிபார்க்க வேண்டும் என்றால் 6 நாட்கள் ஆகும்.

    எனவே தேர்தல் முடிவுகளையே 6 நாள் கழித்து தான் அறிவிக்க முடியும். இதனால் இது சாத்தியமில்லாதது.

    மேலும் தேர்தலை எப்படி நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு ஊழியர்களுக்கு அதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டுவிட்டன. வி.வி.பாட் எந்திர ஒப்புகை சீட்டுக்களை எண்ணுவது தொடர்பாக அவர்களுக்கு எந்த பயிற்சியையும் அளிக்கவில்லை. இனி அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும் சாத்தியமில்லை.

    இதனால் இந்த தேர்தலில் 50 சதவீத ஒப்புகை சீட்டுக்களை எண்ணுவது முடியாத காரியம். ஆகையால் அடுத்த தேர்தலில் வேண்டுமானால் இதை பரிசீலித்து பார்க்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ElectionCommission #SupremeCourt

    வாக்குப்பதிவு மையங்களில் ஒப்புகை சீட்டு முறையை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விளக்கம் அளிக்க தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt #ElectionCommission
    புதுடெல்லி:

    காங்கிரஸ், தி.மு.க, தெலுங்குதேசம், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 21 கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தன.

    அதில், பாராளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் ஏதேனும் ஒரு வாக்குப்பதிவு மையத்தில் ஒப்புகை சீட்டு முறை நடைமுறைப்படுத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்த நடைமுறையால் மொத்தம் பதிவான வாக்குகளில் 0.44 சதவீத வாக்குகள் மட்டுமே சரிபார்க்க நேரிடும். இதனால் ஒப்புகை சீட்டு முறையின் நோக்கம் நிறைவேறாமல் போகும். எனவே, 50 சதவீத வாக்குப்பதிவு மையங்களிலாவது ஒப்புகை சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.



    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய், நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், ஒவ்வொரு தொகுதியிலும் ஏதேனும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வாக்குப்பதிவு மையத்தில் மட்டும் ஒப்புகை சீட்டு முறையை நடைமுறைப்படுத்துவதை மறுபரிசீலனை செய்வது குறித்த பிரமாண பத்திரத்தை தலைமை தேர்தல் கமிஷன் 28-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும், வாக்குப்பதிவு மையங்களில் ஒப்புகை சீட்டு முறையை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர். #SupremeCourt #ElectionCommission 
    தமிழகத்தில் 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின்போது வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் எந்திரம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். #SatyabrataSahoo #EC
    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. எப்போது வேண்டுமானாலும் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் தமிழகம் வரலாம். எனவே நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம். தலைமை தேர்தல் கமிஷனர் வரும் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம்.

    தேர்தலில் எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தேவையான நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தமிழக காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து இன்று அரசுத் துறை செயலாளர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தை தலைமைச் செயலாளர் கூட்ட இருக்கிறார்.

    இந்த கூட்டங்களில் சேகரிக்கப்படும் தகவல்கள் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    தேர்தல் வரவிருப்பதையொட்டி 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய 25-ந்தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அதிகாரிகள் இடமாற்றம் நடந்து வருகிறது. ஒரு சில துறைகள் சில ஆலோசனைகளை கேட்டு உள்ளன. அதுகுறித்த தகவல்கள் தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலில், ‘வாக்காளர்கள் யாருக்கு ஓட்டு அளித்தார்கள்’ என்பதை உறுதி செய்து கொள்வதற்கான ‘வி.வி.பி.ஏ.டி. எந்திரம்  (ஒப்புகை சீட்டு) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த முறை மூலம் காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரை நடக்கும் வாக்குப்பதிவின் போது ஒரு வாக்காளருக்கு 7 நிமிடங்கள் வரை தேவைப்படும்.

    தேர்தல் தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் ஒரே பெயர் பல முறை இடம் பெற்றிருப்பது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் ஒருவருடைய பெயர் பல இடங்களில் இருந்தால் அதனை உடனடியாக நீக்க அனைத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.



    கடந்த 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுவதும் உள்ள 67 ஆயிரத்து 664 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடந்தது. இதில் 7 லட்சத்து 31 ஆயிரத்து 333 பேர் விண்ணப்பங்களை அளித்து உள்ளனர். அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 53 ஆயிரத்து 912 விண்ணப்பங்களும், குறைந்த பட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 258 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. இதில் தகுதி உள்ளவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியை 15 நாட்களுக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

    கூடுதலாக வாக்காளர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பித்து இருப்பதால் கூடுதலாக வாக்குச்சாவடிகளும் தேவைப்படும். இதுகுறித்து இந்திய தேர்தல் கமிஷனுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

    ஆசிரியர்களுக்கு பதில் இதர துறை ஊழியர்களையும் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படுகிறது. ஆனால் அனைத்து கிராமங்களிலும் போதுமான அரசு ஊழியர்கள் இருப்பதில்லை. இதுகுறித்து அனைத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடமும் கருத்து கேட்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #SatyabrataSahoo #EC

    ×